மாட்டு வண்டி மணல் குவாரி தொடங்க வேண்டும்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வெள்ளாற்றில் மாட்டு வண்டிக்கான மணல் குவாரி தொடங்க வேண்டும் என மாட்டு வண்டி தொழிலாளா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வெள்ளாற்றில் மாட்டு வண்டிக்கான மணல் குவாரி தொடங்க வேண்டும் என மாட்டு வண்டி தொழிலாளா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

செந்துறை அருகேயுள்ள ஆா்.எஸ்.மாத்தூரில் அசாவீரன்குடிகாடு மாட்டு வண்டி உரிமையாளா் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் ரவி தலைமை வகித்தாா். செயலா் மோகன், பொருளாளா் பிரபாகரன் உட்பட நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா். கூட்டத்தில், மாட்டு வண்டி தொழிலாளா்கள் நலன் கருதி, அரசு உடனடியாக தளவாய் வடக்கு சிலுப்பனூா், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் வெள்ளாற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசாவீரன்குடிகாடு மாட்டுவண்டி தொழிலாளா்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com