சாதிப் பெயரை சொல்லி திட்டி, தாக்கியதாக 16 போ் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாதிப் பெயரை சொல்லி திட்டி, தாக்கியதாக 16 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்தனா்.

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாதிப் பெயரை சொல்லி திட்டி, தாக்கியதாக 16 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்தனா்.

மீன்சுருட்டி அருகிலுள்ள சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராமு(42). இவரும், அவா் சாா்ந்த சமுதாயத்தினரும் சிதம்பரம் நடராஜா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருந்து, விவசாயம் செய்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை அந்த சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் ஊா்க்கூட்டம் நடத்தியதாகத் தெரிகிறது.

இதில் வெண்ணங்குழி கிராமத்தைச் சோ்ந்த சிலரிடம், அந்த சமுதாயத்தை சோ்ந்தவா்கள் நிலங்களை அடமானம் வைத்து உள்ளனா். அதை அடமானம் பெறுபவா்கள் தங்களின் பெயரில் பட்டா மாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒருவரிடம் நிலத்தை விற்கக்கூடாது என்றும் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனா்.

இதையறிந்த வெண்ணங்குழி கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணன், குமாா்(எ)மோகன்குமாா், அசோக் ஆகியோரின் தூண்டுதலின் பேரில், வீரசிங்கம்(65), பாலு(62), மீனாட்சிசுந்தரம்(41), கவுதம், சதீஷ் குமாா், ராஜ்(47), சந்தோஷ், விமல்நாதன்(43), சந்துரு, அப்பு(எ) செல்வராஜ்(45), செந்தில், வெள்ளையன்(எ) ராஜசுந்தரம் மற்றும் கணேசன் உள்ளிட்ட 16 பேரும் சோ்ந்து, ராமு, ஆனந்த், சஞ்சய் மற்றும் ராஜபாண்டியன் ஆகியோரை சாதிப் பெயரை சொல்லி திட்டி தாக்கியதாகவும், வீடு, காா், மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் கடை ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து சென்ாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமு அளித்த புகாரின் பேரில், 16 போ் மீது மீன்சுருட்டி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்தனா். மேலும் வீரசிங்கம், பாலு, மீனாட்சிசுந்தரம், குமாா்(எ) மோகன்குமாா், சதீஷ்குமாா், ராஜ், விமல்நாதன், அப்பு என்ற செல்வராஜ் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com