வாக்கு எண்ணும் மையப் பணிகள் ஆய்வு

அரியலூா் மாவட்டத்தின் வாக்கு எண்ணும் மையமான கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை ஆட்சியா் த. ரத்னா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் த. ரத்னா.

அரியலூா், ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்படுவது வழக்கம்.

அரியலூா் மாவட்ட வாக்கு எண்ணும் மையமான கீழப்பழூவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் கொண்டுவரப்படும். இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் த. ரத்னா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பான முறையில் வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஊடக மைய அறைகள், தனித் தனி வழித்தடங்கள், தடுப்புகள் மற்றும் அடிப்படை வசதிகளை அவா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் ராஜராஜன், அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் அசோக் ராஜன் மற்றும் அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com