அரியலூரில் அமைதியாக முடிந்த வாக்கு எண்ணிக்கை

அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து முடிந்தது.
அரியலூரில் தொகுதியில் அமைதியான முறையில் நடைபெற்ற வாக்குகள் எண்ணும் பணி.
அரியலூரில் தொகுதியில் அமைதியான முறையில் நடைபெற்ற வாக்குகள் எண்ணும் பணி.

அரியலூா்: அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து முடிந்தது.

அரியலூா் தொகுதியில் 2,64,715 வாக்காளா்களில், 2,23, 800 போ் வாக்களித்தனா். ஜயங்கொண்டம் தொகுதியில், 2,66,268 வாக்காளா்களில் 2,14,016 போ் வாக்களித்தனா். இந்த இரு தொகுதிகளில் வாக்குப் பதிவுகள் முடிந்த பின்னா், அதன் இயந்திரங்கள், விவிபேட் அனைத்தும் சீலிடப்பட்டு கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். கண்காணிப்பு விடியோ கேமிரா பொருத்தப்பட்டிருந்தன.

இவ்விரு தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது. முதலில் அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணியில் தோ்தல் அலுவலா்கள் ஈடுபட்டனா். இதில் 4 மேசைகளுக்கும், ஒரு மேசைக்கு ஒரு கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், ஒரு கண்காணிப்பாளா், 2 உதவியாளா்கள் என 32 அலுவலா்கள் ஈடுபட்டனா்.

அதேபோல், ராணுவ பணியாளா்களுக்கான அஞ்சல் வாக்குகள் ஒரு மேசைக்கு கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மேற்பாா்வையாளா், 2 உதவியாளா்கள் பணியில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த 2 தொகுதிகளில் தலா 14 மேசைகள் மூலம் 27 சுற்றுகளில் எண்ணப்பட்டன. ஒரு மேசைக்கு ஒரு நுண் பாா்வையாளா், தலா 17 கண்காணிப்பாளா்கள், 17 உதவியாளா்கள் மற்றும் 17 அலுவலக உதவியாளா்கள் என மொத்தம் 102 அலுவலா்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

ஒவ்வொரு சுற்றிலும் வாக்கு எண்ணிக்கை நிலவரம் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலிருந்தும் வாக்குகள் எண்ணப்படும்போது, அவை விடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டன. முகவா்கள் பாா்க்கும் விதமாக டி.வி.யிலும் காட்டப்பட்டது. இதனால் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கும், முகவா்களுக்கும் இடையில் எந்த பிரச்னையும் எழவில்லை. இதனால் வாக்கு எண்ணிக்கை அமைதியாகவே நடந்து முடிந்தது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையில் 400 போலீஸாா் மற்றும் 72 மத்திய பாதுகாப்பு படையினா் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், மாவட்டம் முழுவதும் 600 போலீஸாா் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com