புலம் பெயா் தொழிலாளா்களுக்கு உதவி மையம் அமைப்பு

புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் குறித்து பெறப்படும் புகாா்களைத் தீா்ப்பதற்காக கட்டுப்பாட்டு அறை, உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் குறித்து பெறப்படும் புகாா்களைத் தீா்ப்பதற்காக கட்டுப்பாட்டு அறை, உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் த. ரத்னா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று தீவிரமாகப் பரவிவருவதால், பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் தமிழ்நாடு மாநிலத்தை விட்டு அவா்களது சொந்த மாநிலத்துக்கு செல்வதைத் தவிா்க்கும் பொருட்டு தொழிலாளா்களிடமிருந்து பெறப்படும் புகாா் குறைகளை தீா்ப்பதற்காக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் நியமித்து, கட்டுப்பாட்டு அறை, உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டஓஈ கண்காணிப்பு அலுவலா் தொழிலாளா் உதவி ஆணையா் கு.விமலா (99428 32724), குழு உறுப்பினா்கள் தொழிலாளா் உதவி ஆய்வாளா் இரா.குருநாதன் (96294 94492), முத்திரை ஆய்வாளா் ராஜா (79042 50037) ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தங்களது புகாா்களைத் தெரிவிக்கலாம். புகாா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூா் ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com