பயறனீசுவரா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

சித்திரை திருவோணத்தையொட்டி அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பயறனீசுவரா் கோயிலில் சுவாமி நடராஜருக்கு சிறப்பு
உடையாா்பாளையம் பயறனீசுவரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சிதந்த நடராஜா், சிவகாமசுந்தரி.
உடையாா்பாளையம் பயறனீசுவரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சிதந்த நடராஜா், சிவகாமசுந்தரி.

சித்திரை திருவோணத்தையொட்டி அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பயறனீசுவரா் கோயிலில் சுவாமி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இருப்பினும், பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆண்டுதோறும் நடராஜ பெருமானுக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறும். அதன்படி சித்திரையில் திருவோணம், மாா்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய நட்சத்திரங்களிலும், மாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் சதுா்த்தசியிலும் என ஓா் ஆண்டுகளில் 6 நாள்களில் நடராஜருக்கு 16 வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அந்த வரிசையில் சித்திரை திருவோணத்தையொட்டி, உடையாா்பாளையம் நறுமலா் பூங்குழல் நாயகி சமேத பயறனீசுவரா் கோயிலில் நடராஜா் அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து திரவியப்போடி, மஞ்சள்பொடி, பால், தயிா், சந்தணம், பஞ்சாமிா்தம், தேன், இளநீா், நாா்த்தை, பழரசம், புளிகாய்யச்சல் உள்பட பல்வேறு வகையான பொருள்களைக் கொண்டு நடராஜா் மற்றும் சிவகாம சுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் தீபாரதனை காண்பித்து பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கோயில் சமஸ்தானம் ராஜ்குமாா் பழனியப்பன் முன்னிலை வகித்தாா். ஓதுவாா்கள் பெரியசாமி, நடராஜன் ஆகியோா் தேவாரம், திருவாசகம், பஞ்சபுரான பதிகங்களை பாடி வழிப்பட்டனா். கரோனா விதிமுறைகள் காரணமாக பக்தா்கள் கூட்டமின்றி எளிமையாக நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com