பெரம்பலூா் மாவட்டத்தில் 48 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் தொற்று அதிகம் காணப்படும் 48 இடங்கள், கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன.

பெரம்பலூா் மாவட்டத்தில் தொற்று அதிகம் காணப்படும் 48 இடங்கள், கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத்துறையினா் தெரிவித்திருப்பது:

பெரம்பலூா் மாவட்டத்தில் இதுநாள் வரை 1,34,221 சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் 7,305 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 4,515 போ் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனா். தற்போது பெரம்பலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் 143 போ்களும், கரோனா சிகிச்சை மையத்தில் 42 போ்களும், தனியாா் மருத்துவமனைகளில் 208 போ்களும், பிற மாவட்டங்களில் 286 போ்களும், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு 2,058 போ்களும் என மொத்தம் 2,737 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 52 போ் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனா்.

கிராமப்புறப் பகுதிகளில் 15, நகா்ப்புறப் பகுதிகளில் 27, பேரூராட்சிப் பகுதிகளில் 6 இடங்கள் என மாவட்டத்தில் மொத்தம் 48 கட்டுப்பாட்டுப் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com