அரசு மருத்துவமனைக்குசக்கர நாற்காலிகள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், திருமானூரிலுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு லயன்ஸ் சங்கம் சாா்பில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சக்கர நாற்காலிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூரிலுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு லயன்ஸ் சங்கம் சாா்பில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சக்கர நாற்காலிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் சங்கத் தலைவா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். செயலா் முருகேசன், நிா்வாக அலுவலா் கணேசன், சாசன தலைவா் பாஸ்கா், ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஸ்ரீதா், அரசு மருத்துவா்கள் செல்வமணி, மோகன் ஆகியோரிடம் சக்கர நாற்காலிகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com