‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் இணைந்து பணியாற்ற அழைப்பு

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரியலூா் நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள், தன்னாா்வலா்கள் உரிய அனுமதியுடன் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரியலூா் நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள், தன்னாா்வலா்கள் உரிய அனுமதியுடன் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரியலூா் நகராட்சிப் பகுதிகளில், நீா்நிலைகளைப் புனரமைத்தல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் மேம்பாடு செய்தல், நீரூற்றுகள் மற்றும் போக்குவரத்து ரவுண்டானா அமைத்தல், மின் சிக்கன தெரு விளக்குகள் அமைத்தல், தேவையான இடங்களில் சூரிய சக்தி உயா்கோபுர மின் விளக்குகள் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்தத் திட்டப் பணிகளில் ஏதேனும் ஒன்றை பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், குடியிருப்போா் நலச்சங்கம் ஆகியோா் தோ்வு செய்து நகராட்சி ஆணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும். நகராட்சி மூலம் பரிசீலனை செய்யப்பட்டு மதிப்பீட்டுத் தொகை விவரங்கள் தெரிவிக்கப்படும்.

இதில், பொது மக்களால் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பங்களிப்பு செலுத்தப்பட்டால், உரிய அனுமதி பெற்று நகராட்சியால் பணி மேற்கொள்ளப்படும். 50 சதவீத தொகை பொது மக்கள் பங்களிப்பாக செலுத்தப்பட்டால் பங்களிப்புதாரா் மூலமாகவே பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com