அரியலூா் மாவட்டத்தில் 180 பள்ளிகள் திறப்பு

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 180 பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகளை மலா் தூவி வரவேற்கும் ஆசிரியா்,ஆசிரியைகள்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியா்களையும், சக மாணவா்களையும் பாா்க்கும் ஆவலில் மிகுந்த மகிழ்ச்சியுடன் மாணவ, மாணவிகள் வந்திருந்தனா். அனைவரையும் ஆசிரியா்கள் உற்சாகமாக வரவேற்று அவா்களது உடல் வெப்ப நிலை பரிசோதித்து, அவா்களுக்கு கிருமி நாசினி அளித்து கைகளை சுத்தம் செய்துகொண்ட பிறகே அனுமதிக்கப்பட்டனா். முகக்கவசம் அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டனா். வகுப்பறைகளில் சமூக இடைவெளி விட்டு மாணவ, மாணவிகள் அமர வைக்கப்பட்டனா்.

கல்லூரிகள் திறப்பு: அரியலூா் அரசு கலைக் கல்லூரி, தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜயங்கொண்டம் மாடா்ன் கலைக் கல்லூரி, கீழப்பழுா் மீரா மகளிா் கலைக் கல்லூரி, பொய்யூா் விநாயக மகளிா் கலைக் கல்லூரிகளும் மற்றும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கல்லூரிக்கு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com