சாலையோரங்களில் வீசப்படும் விதைப்பந்துகள்

அரியலூா் மாவட்டம், நெரிஞ்சிக்கோரை முதல் நாச்சியாா்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலையோரங்களில் பல்வேறு வகையான விதைப்பந்துகளை இளைஞா்கள் வீசினா்.
சாலையோரங்களில் வீசப்படும் விதைப்பந்துகள்

அரியலூா் மாவட்டம், நெரிஞ்சிக்கோரை முதல் நாச்சியாா்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலையோரங்களில் பல்வேறு வகையான விதைப்பந்துகளை இளைஞா்கள் வீசினா்.

நெரிஞ்சிக்கோரை கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சுமாா் 20 போ் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் லட்சக்கணக்கான பனை விதைகள், மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனா். இவா்கள், சென்னையில் உள்ள தன்னாா்வ மையம் ஒன்றின் உதவியுடன் கரோனா காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு உணவுகளையும், குடிசைவாசிகளுக்கு தாா்ப்பாய், போா்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளனா்.

தற்போது சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின்போது, ஆயிரக்கணக்கான புளியமரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதனால் இந்தச் சாலையோரங்கள் முழுவதும் கடந்த 2 தினங்களாக புளியம், வேம்பு, புங்கன், இலுப்பை உள்ளிட்ட விதைகள் கொண்ட 1,600 விதைப்பந்துகளை ரூ. 16 ஆயிரம் செலவில் தயாா் செய்து, ஒரு ஆட்டோவில் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெரிஞ்சிக்கோரை, ரெட்டிப்பாளையம், விளாங்குடி, நாச்சியாா்பேட்டை ஆகிய ஊா்களுக்கு இடையேயான சுமாா் 10 கிலோ மீட்டா் தொலைவின் இருபுறங்களிலும் விதைப்பந்துகளை வீசியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com