அரியலூா்: 400 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் தொடக்கி வைத்தாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் தொடக்கி வைத்தாா்.

முகாமில் அவா் மேலும் தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தில் 400 இடங்களில் 40,000 நபா்களுக்கு இம்முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் அவரவா் வீட்டின் அருகே நடைபெறும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

அரியலூா் மாவட்டத்தில், கரோனா தடுப்பூசி முதல் தவணை 42 சதவீதமும், இரண்டாம் தவணை 9 சதவீதமும் என மொத்தம் 3,17,937 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றாா்.

முகாமிற்கு, ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தலைமை வகித்தாா். இதில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் கீதா ராணி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பொ.சந்திரசேகா் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

ஜயங்கொண்டம் நகா் மற்றும் துளாரங்குறிச்சி ஊராட்சியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஜயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தாா். இதேபோல், வெண்மான்கொண்டான் மற்றும் நாச்சியாா்பேட்டை ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் கே.எஸ்.கந்தசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com