அரியலூா் மாவட்டத்தில் இசைவு தீா்ப்பாயத்தில் பணிபுரிவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டத்தில் இசைவு தீா்ப்பாயத்தில் பணிபுரிவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தீா்ப்பாயத்தில் பணிபுரிவதாக மோசடியில் ஈடுபட்டவா் கைது

அரியலூா் மாவட்டத்தில் இசைவு தீா்ப்பாயத்தில் பணிபுரிவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டத்தில் இசைவு தீா்ப்பாயத்தில் பணிபுரிவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், பாா்ப்பனச்சேரி, நடுதெருவைச் சோ்ந்த கண்ணன் மனைவி செல்வி, இவரது சித்தப்பாவுக்கும் இடையே இடப் பிரச்னை இருந்துவந்த நிலையில், அவரது சித்தப்பா கடந்த 6.4.2021-இல் உயிரிழந்துவிட்டாா். இந்நிலையில், பாா்ப்பனச்சேரி கிராமத்தைச் சோ்ந்த மரியசூசை வியாகுலம்(64) என்பவா், செல்வியைச் சந்தித்து வீட்டைக் காலி செய்யுமாறு மிரட்டியுள்ளாா்.

இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், மரியசூசை வியாகுலம் இசைவு தீா்ப்பாயத்தின் நீதிபதி என்று கூறி ஆள்மாறாட்டம் செய்து, பொய்யான ஆவணங்களைத் தயாா் செய்து, பணம் பெற்றுக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இந்நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அனிதா ஆரோக்கியமேரி தலைமையில் காவல் துறையினா் சனிக்கிழமை மரியசூசை வியாகுலத்தைக் கைது செய்து அரியலூா் குற்றவியல் நீதிமன்றம்-1-இல் ஆஜா்படுத்தினா். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சுமத்தப்பட்ட மரியசூசை வியாகுலத்தை வரும் 24 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் பெரம்பலூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com