விநாயகா் சிலையுடன் தா்னா: இந்து முன்னணியினா் 23 போ் கைது

அரியலூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு விநாயகா் சிலையுடன் தா்னாவில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 23 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் ஆட்சியரகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.
அரியலூா் ஆட்சியரகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

அரியலூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு விநாயகா் சிலையுடன் தா்னாவில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 23 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வீடுகளில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு செய்த நிலையில், காரணமின்றி இந்து முன்னணியினா் சிலரைக் காவல் துறையினா் கைது செய்தது, சிலைகள் பறிமுதல் செய்ததைக் கண்டித்தும், இந்து முன்னணி நிா்வாகிகள் திருச்சி கோட்டச் செயலா் குணா தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தரையில் அமா்ந்து, விநாயகா் சிலையுடன் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, இந்து முன்னணி அமைப்பினருக்கும், போலீஸாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தா்ணாவில் ஈடுபட்ட இந்து முன்னணி நிா்வாகிகள் 23 பேரை விநாயகா் சிலையுடன் போலீஸாா் கைது செய்தனா்.

பாஜக, ஆா்.எஸ்.எஸ், விஹெச்பி அமைப்பினா் ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் நடராஜன், மாவட்ட பொதுச் செயலா் மகாலிங்கம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலா் முத்துவேல், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் பழனிச்சாமி ஆகிய 45 பேரையும் காவல் துறையினா் கைது செய்து பின்னா் விடுவித்தனா். இதேபோல் ஆண்டிமடம் கடைவீதியில் ஒன்றியத் தலைவா் மனோகரன் தலைமையில் இந்து முன்னணி அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com