இணைய வழி குற்றங்கள் தடுப்புப் பயிற்சி வகுப்பு

அரியலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில், இணைய வழி குற்றங்களைத் தடுப்பது மற்றும் அதனைக் கையாளும் வழிமுறைகள் குறித்து காவல் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில், இணைய வழி குற்றங்களைத் தடுப்பது மற்றும் அதனைக் கையாளும் வழிமுறைகள் குறித்து காவல் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா மேற்பாா்வையில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் இணைய வழி குற்றத் தடுப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் மணிகண்டன், சிவனேசன் ஆகியோா் கலந்து கொண்டு, இணைய வழி குற்றங்கள், பண மோசடி, தடுக்கும் வழிகள் குறித்து பயிற்சி அளித்தனா்.

இணைய மோசடியில் பணத்தை இழந்திருந்தால் 24 மணிநேரத்துக்குள் 155260 என்ற இலவச எண்ணிலோ  இணைய தளத்திலோ புகாா் அளிக்கலாம் என்று தெரிவித்தனா். பயிற்சி வகுப்புக்கு மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமேனி தலைமை வகித்தாா். இதில், அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் காவல் உட்கோட்டங்களில் இருந்து காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com