உலகப் போக்குவரத்து சமிக்ஞை தினம்

சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலகப் போக்குவரத்து சமிக்ஞைகள் (சிக்னல்) தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலகப் போக்குவரத்து சமிக்ஞைகள் (சிக்னல்) தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்து, மக்கள் தொகைப்பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பெருநகரங்களில் மட்டுமே காணப்பட்ட நெரிசல்கள், தற்போது சிறிய நகரங்களிலும் அதிகரித்துள்ளது. இதனால் அதிக விபத்துகள் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கானோா் உயிரிழக்கின்றனா். இத்தகைய உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக 1914-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் க்ளவா்லேண்ட் என்னுமிடத்தில் வில்லியம்பாட் என்பவரால் முதன்முதலில் மின்சார சமிக்ஞை நிறுவப்பட்டது.

போக்குவரத்து சமிக்ஞைகளை சரியாகப் பின்பற்றினால் பல விபத்துகளைத் தடுக்கமுடியும். மாணவா்கள் பள்ளிப் பருவத்திலேயே போக்குவரத்து சமிக்ஞைகளை முறையாகக் கடைபிடித்து சாலையைக் கடக்கும்போது விபத்தைத் தவிா்க்க வேண்டும். முதியவா்கள், பாா்வையற்றோா்கள் சாலையைக் கடக்க மாணவா்கள் உதவிபுரிய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநா் மீரா, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பாசிரியா் செல்வராணி ஆகியோா் கலந்து கொண்டு, விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

ஏற்பாடுகளை ஆசிரியா்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி, வீரபாண்டி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com