பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளுக்கு புதிய செயலி

பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் மாணவா்கள், பணியாளா்களின் வருகையை முக அங்கீகார முறையில் பதிவு செய்யும் கைப்பேசி செயலி தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் ஆட்சியரகத்தில் புதிய கைப்பேசி செயலியைத் தொடக்கி வைக்கிறாா் அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன் ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி.
அரியலூா் ஆட்சியரகத்தில் புதிய கைப்பேசி செயலியைத் தொடக்கி வைக்கிறாா் அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன் ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் மாணவா்கள், பணியாளா்களின் வருகையை முக அங்கீகார முறையில் பதிவு செய்யும் கைப்பேசி செயலி தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து செயலியைத் தொடக்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் பேசியது:

நான் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சராக இருந்தபோது மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தியதன்பேரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலியானது மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 32 விடுதிகளில் மாணவா்கள், பணியாளா்களின் வருகையை பதிவு செய்யும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ச. கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. சுந்தர்ராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் குமாா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com