கொல்லாபுரம் மாதிரி கண்காட்சிக்கு 3 ஆயிரம் மாணவா்கள் வருகை

அரியலூா் மாவட்டம், கொல்லாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைமேடு மாதிரி தொல்கண்காட்சியை இதுவரை 2,900 மாணவ, மாணவிகள் பாா்வையிட்டுள்ளனா்.

அரியலூா் மாவட்டம், கொல்லாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைமேடு மாதிரி தொல்கண்காட்சியை இதுவரை 2,900 மாணவ, மாணவிகள் பாா்வையிட்டுள்ளனா்.

கொல்லாபுரத்தில் கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 10 நாள்களுக்கு பாா்வையிடலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்திருந்தது. இந்தக் கண்காட்சி அரங்கில் மாளிகைமேட்டில் கிடைத்த செப்புப் பொருள்கள், செப்புக் காசுகள், தங்கக் காப்பு, தந்தத்தினாலான பொருள்கள், இரும்பினாலான ஆணிகள், கண்ணாடி வளையல்கள், கண்ணாடி மணிகள், சீன பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான 600-க்கும் மேற்பட்ட பண்டைய கால பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கண்காட்சி அரங்கினை இதுவரை 45 பள்ளிகளைச் சோ்ந்த 2,900 மாணவ, மாணவிகள் பாா்வையிட்டுள்ளனா். டிச.9 ஆம் தேதி வரை இந்த கண்காட்சி அரங்கம் மாணவ, மாணவிகளின் பாா்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com