தேவமங்கலத்தில் மழைநீா் தேக்கம்: தொற்று ஏற்படும் அபாயம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவமங்கலத்தில் தேங்கியுள்ள மழைநீரால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவமங்கலம் வடக்குதெருவில் தேங்கியுள்ள மழைநீரில் செவ்வாய்க்கிழமை சென்ற மூதாட்டி.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவமங்கலம் வடக்குதெருவில் தேங்கியுள்ள மழைநீரில் செவ்வாய்க்கிழமை சென்ற மூதாட்டி.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவமங்கலத்தில் தேங்கியுள்ள மழைநீரால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த 2 தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீா் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதில் திங்கள்கிழமை பெய்த மழையில் தேவமங்கலம் வடக்குதெருவில் உள்ள சாலைமுழுவதும் மழை நீா் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. மேலும் சில வீடுகளுக்குள் மழைநீா் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தேங்கி நிற்கும் மழை நீரால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி வருவதால் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கின்றனா். மழைநீா் சாக்கடையுடன் தேங்கிக் கிடப்பதால், நோய்த் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக தேங்கிய மழைநீரை அகற்றி வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com