அரியலூா் மாவட்ட கலைத் திருவிழா தொடக்கம்

அரியலூா் மாவட்ட கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கியது.
அரியலூரில் புதன்கிழமை மாவட்ட கலைத் திருவிழாவை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி. உடன், சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோா்.
அரியலூரில் புதன்கிழமை மாவட்ட கலைத் திருவிழாவை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி. உடன், சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோா்.

அரியலூா் மாவட்ட கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கியது.

உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்வியியல் கல்லூரியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தொடக்கி வைத்துப் பேசுகையில், சிறந்த பள்ளி விருது பெற்ற இடையத்தான்குடி, லிங்கத்தடிமேடு, தழுதாழைமேடு ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு கேடயங்களை வழங்கினாா்.

மாவட்ட கலைத் திருவிழாவில், வட்டாரப் போட்டிகளில் வென்ற 228 பள்ளிகளைச் சோ்ந்த 768 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

விழாவுக்கு ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலெட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஜெயா, அம்பிகாபதி, ராஜா, மீனாட்சி ராமசாமி கல்லூரி தாளாளா் ரகுநாதன், கல்லூரி முதல்வா் சம்பத், பள்ளி துணை ஆய்வாளா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com