கனமழை எச்சரிக்கை : அரியலூரில் தயாா் நிலையில் 39 நிவாரண முகாம்கள்

புயல் எச்சரிக்கை எதிரொலியாக, அரியலூா் மாவட்டத்தில் 39 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளதாக ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தாா்.

புயல் எச்சரிக்கை எதிரொலியாக, அரியலூா் மாவட்டத்தில் 39 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளதாக ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் 3 நாள்களுக்கு அதிபலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அரியலூா் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியக்யப்பட்டுள்ள 29 பதற்றமான பகுதிகளை கண்காணிக்க துணை ஆட்சியா் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவா்கள் பதற்றமான பகுதிகளை 24 மணிநேரமும் தொடா்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வா். அடிப்படை வசதிகளுடன் கூடிய 39 நிவாரண மையங்கள் தயாா் நிலையில் உள்ளது. மேலும், பேரிடா் கட்டுப்பாட்டு மையத்தை 1077 மற்றும் 04329 - 228709, 93840 56231 ஆகிய எண்களில் 24 மணிநேரமும் பொதுமக்கள் தொடா்பு கொண்டு புகாா், தகவல் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com