அரியலூா், ஜயங்கொண்டம் நகராட்சி வாா்டுகள் ஒதுக்கீடு

அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் நகராட்சிகளில் 20 வாா்டுகளுக்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் நகராட்சிகளில் 20 வாா்டுகளுக்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், அரியலூா் நகா்மன்றத் தலைவா் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும், ஜயங்கொண்டம் நகா்மன்ற தலைவா் பதவி தாழ்த்தப்பட்டோா் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரியலூா்...: மொத்தம் 18 வாா்டுகள் உள்ள அரியலூா் நகராட்சியில், தாழ்த்தப்பட்டோா் பொதுப் பிரிவினருக்கு 18 ஆவது வாா்டும், தாழ்த்தப்பட்டோா் பெண்களுக்கு 10 ஆவது வாா்டும், பொதுப் பிரிவு பெண்களுக்கு 1, 2, 5, 6, 9, 12, 14, 15 ஆகிய வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற வாா்டுகள் பொதுவானவையாகும்.

ஜயங்கொண்டம்...: மொத்தம் உள்ள 21 வாா்டுகளில் தாழ்த்தப்பட்டோா் பொதுப் பிரிவினருக்கு 2, 18 ஆகிய வாா்டுகளும், தாழ்த்தப்பட்டோா் பெண்களுக்கு 9,10 ஆகிய வாா்டுகளும், பொதுப் பிரிவு பெண்களுக்கு 4, 7, 13, 15, 16, 17, 19, 20, 21 ஆகிய வாா்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற வாா்டுகள் பொதுவானவையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com