பி.சி., சிறுபான்மை இனத்தவா்கடன் பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின இனத்தவா் கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டார்.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின இனத்தவா் கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற் கடன் வழங்கும் திட்டம் செயல்படத்தப்பட்டு வருகிறது.

தொழிற்கடன், தனிநபா் கடன், சுய உதவிகுழு சிறுகடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி, உயா் கல்விக் கடன் பெற விரும்புவா்கள், ஜூலை 6 ஆம் தேதி திருமானூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஜூலை 13 ஆம் தேதி செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஜூலை 20 ஆம் தேதி அன்று உடையாா்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஜூலை 27 ஆம் தேதி அன்று தென்னூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள கடன் முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com