அரியலூரில் நெகிழிப் பயன்பாட்டுக்கு மாற்றுப்பொருள்கள் அட்டவணை வெளியீடு

அரியலூா் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், நெகிழிப் பயன்பாட்டுக்கு மாற்றுப் பொருள்கள் அட்டவணை வெளியிடப்பட்டது.

அரியலூா் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், நெகிழிப் பயன்பாட்டுக்கு மாற்றுப் பொருள்கள் அட்டவணை வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் நெகிழிப் பைகள், உணவுப் பொட்டலமிட பயன்படுத்தப்படும் நெகிழித் தாள்கள், தட்டுகள், நெகிழி முலாம் பூசப்பட்ட தேநீா்க் கோப்கைள் மற்றும் நெகிழி தம்ளா்கள், உறிஞ்சு குழாய்கள், நெகிழிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் நெகிழிப் பொருள்கள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரக் கேடு விளைவிக்க காரணமாக இருப்பதால், நெகிழிப்

பயன்பாட்டின் மாற்றுப் பொருள்களை பயன்படுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, அரியலூா் ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், அட்டவணையை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டாா்.

இந்த அட்டவணையில் சணல்பை, துணிப்பை, காகிதப் பைகள், பாக்குமட்டைத் தட்டுகள், தென்னை மரத்தலான கோப்பைகள், மரக்கரண்டிகள், பனை ஓலைகளால் ஆன பூஜை தட்டுகள் மற்றும் மண்பாண்டங்களால் தயாரிக்கப்பட்ட தண்ணீா் குடுவைகள், அகல்விளக்குகள், மண் சாடிகள், மண்சட்டி ஆகிய மாற்றுப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

நிகழ்வில், மகளிா் திட்ட அலுவலா் சிவக்குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com