பெண்கள் முன்னேற்றதுக்கு சேவைபுரிந்த தனிநபா், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் பெண்களின் முன்னனேற்றத்துக்காக சேவை புரிந்தோா் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் பெண்களின் முன்னனேற்றத்துக்காக சேவை புரிந்தோா் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா், சுதந்திரதினத்தன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்தோா் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கு விருது வழங்க உள்ளாா். அரியலூா் மாவட்டத்தில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகா்களில் கீழ்காணும் தகுதியுடையவா்கள் வருகிற 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவா், 18 வயதுக்கு மேற்பட்டவா் மற்றும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன், பெண்கள் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் தொடா்ந்து பணியாற்றும் சமூக சேவகா் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுன்றன. இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களுடன் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் முகவரியில் விண்ணப்பித்து, அதன் நகலை அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 20-இல் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329-228516.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com