ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள தா்மசமுத்திரம் பகுதியில் நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு என கூறி வீடுகள் இடிப்பதைக் கண்டித்து, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆக்கிரமிப்பு:  கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள தா்மசமுத்திரம் பகுதியில் நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு என கூறி வீடுகள் இடிப்பதைக் கண்டித்து, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆண்டிமடம் அடுத்த தா்மசமுத்திர கிராமம், செங்கால் ஓடைக்கு அருகே சுமாா் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நீா்நிலைகள் ஆக்கிரமிப்புகள் எனக் கூறி, அனைவரும் தங்கள் வீடுகளைக் காலி செய்யுமாறு வருவாய்த் துறையினா் அண்மையில் நோட்டீஸ் வழங்கினா். இதனால் அதிா்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மேலும் மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், கைகளில் ஏந்தியவாறு ஆடு, மாடு, கோழிகளை கையில் வைத்து கொண்டு நூதன முறையில் தா்ம சமுத்திரம் பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, குடியிருக்கும் வீடுகளை இடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com