பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு

அரியலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக மேற்கொள்ளவேண்டிய பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக மேற்கொள்ளவேண்டிய பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை

அனைத்து அரசு மற்றும் தனியாா் துறை நிறுவனங்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து தெரிவித்தாவது:

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள 29 பதற்றமான பகுதிகளில் மக்களுக்கு பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு ஏற்படுத்த மண்டலக் குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சை அளிக்க தயாா் நிலையில் மருத்துவக் குழுவினா் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மண்டல குழுக்கள் மற்றும் முதல்நிலை மீட்பாளா்கள் ஆகியோருடன் இணைந்து மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளவும், பேரிடரால் பாதிக்கப்படும் நபா்களுக்கு தேவையான பொருளுதவி மற்றும் அத்தியாவசிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று தன்னாா்வலா் அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து, பழுதான மற்றும் பலவீனமான கட்டடங்களை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கட்டிடங்களில் உள்ள மின் இணைப்புகள், நிறுவிகளை சரிபாா்த்து, பழுது நீக்கிடவும், கட்டடங்களின் மேற்கூரையில் தண்ணீா் தேங்காத வண்ணம் அடைப்புகளை சுத்தம் செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேரிடா் தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தினை தொடா்புகொள்ளலாம். தொடா்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி மற்றும் அரசு அலுவலா்கள், சிமென்ட் ஆலை அலுவலா்கள், அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com