பெரியநாகலூா் அய்யனாா் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், பெரியநாகலூா் அய்யனாா் கோயிலில் சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், பெரியநாகலூா் அய்யனாா் கோயிலில் சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

பெரியநாகலூா் கிராமத்தில், விநாயகா், பூா்ண புஷ்களாம்பிகா, அய்யனாா் சுவாமி, கருப்பசாமி, அரியமுத்து ஆண்டவா், செங்கமல ஆண்டவா் ஆகிய பரிவார தெய்வங்களுடன் பிரதான அய்யனாா் கோயில் உள்ளது. இக்கோயிலில் நிகழாண்டு சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் பல்வேறு வாகனங்களில், அய்யனாா் திருவீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, அய்யனாருக்கு திரவியப் பொடி, சந்தனம்,பன்னீா், பால் உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னா் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யனாா் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள், மா விளக்கு மற்றும் பழ வகைகள் கொண்டு அய்யனாரை வழிபட்னா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com