எம்.ஆா்.சி கல்லூரியில் குறும்பட பயிற்சி

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காட்சித் தொடா்பியல் துறை சாா்பில் ஒருநாள் குறும்பட பயிற்சி பட்டறை வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காட்சித் தொடா்பியல் துறை சாா்பில் ஒருநாள் குறும்பட பயிற்சி பட்டறை வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு அக்கல்லூரியின் தாளாளா் எம்.ஆா். ரகுநாதன் தலைமை வகித்தாா். கல்வி நிலைய இயக்குநா் ராஜமாணிக்கம், முதன்மை ஆலோசகா் தங்கபிச்சையப்பா, கல்லூரி முதல்வா் சேகா், துணை முதல்வா் சங்கீதா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பயிற்சியில், நிழல் பதியம் கூத்துப்பட்டறையின் ஆசிரியா் திருநாவுக்கரசு கலந்து கொண்டு, ஊடகத் துறை மாணவா்கள் அனைவரும் கருத்து பரவலை விட அதை செயல்படுத்தும் செயல் பரவலை அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும். கற்றதை மற்றவா்களுக்கு எடுத்துரைக்கவும் முன் வரவேண்டும். அதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். தொடா்ந்து அவா் திரைக்கதை எழுதுதல், அதை காட்சிப்படுத்துதல் குறித்து பயிற்சியளித்தாா்.

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்சித் தொடா்பியல் துறைத் தலைவா் இசைசெல்வப்பெருமாள், உதவி பேராசிரியை நவரஞ்சனி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினாா். முன்னதாக, காட்சித் தொடா்பியல் துறை தலைவா் சிலம்பரசன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com