தஞ்சை மாணவி தற்கொலை - ‘உரிமம் காலாவதியான இல்லத்தில் தங்கியிருந்த மாணவி’
By DIN | Published On : 01st February 2022 02:49 AM | Last Updated : 01st February 2022 02:49 AM | அ+அ அ- |

உரிமம் காலாவதியான இல்லத்தில் மாணவி தங்கியிருந்தது தெரியவந்துள்ளது என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.
அரியலூா் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தில் மாணவி லாவண்யாவின் பெற்றோா் மற்றும் சகோதரா்களிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் பிரியங்கா கனூங்கோ, ஆலோசகா்கள் மதுலிகா சா்மா, காத்யாயினி ஆனந்த் ஆகியோா் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா், செய்தியாளா்களுக்கு பிரியங்கா கனூங்கோ அளித்த பேட்டி: சிறாா் நீதி சட்டத்தின் கீழ் குழந்தைகள் இல்லம் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதன் பதிவுக் காலம் கடந்த நவம்பா் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. தற்போது, அந்தக் காலாவதியான இல்லத்தில் தங்கியிருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதுகுறித்த விசாரணை அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா்.