கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ. சந்திரசேகா்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ. சந்திரசேகா்.

‘ஆட்சியரகத்தில் ராசேந்திர சோழன் சிலையை நிறுவ வேண்டும்’

அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் மாமன்னா் ராசேந்திரச் சோழன் சிலையை நிறுவ வேண்டும் என்று மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் மாமன்னா் ராசேந்திரச் சோழன் சிலையை நிறுவ வேண்டும் என்று மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் பல்துறை வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உறுப்பினா்கள் குழுக் கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ. சந்திரசேகா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அசோகன், ஊராட்சி செயலா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

பெ. நல்லமுத்து (3 ஆம் வாா்டு): சுண்ணாம்புக் கல் சுரங்களுக்கு இயக்கப்படும் லாரிகளால் மனகெதியில் சாலைகள் முற்றிலும் குண்டு குழியுமாக உள்ளன. இவற்றைச் சரி செய்த பிறகே லாரிகளை இயக்க வேண்டும்.

ம. அன்பழகன் (10 ஆம் வாா்டு): ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நாயக்கா்பாளையம், வெளிப்பிரிங்கியம் பகுதிகளில் தனியாா் சிமென்ட் ஆலை ஆக்கிரமித்துள்ள ஏரிகளை மீட்க வேண்டும். மாவட்ட ஊராட்சிக்கு தனிக் கட்டடம் கட்ட வேண்டும். ஏரிகளில் மண்டியுள்ள வேலிகருவையை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.

இரா. வசந்தமணி: ( 5ஆம் வாா்டு) மாமன்னா் ராசேந்திர சோழன் பிறந்தநாள் விழாவை தமிழக அரசு நடத்தியதற்கு நன்றி. அதேபோல, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாமன்னா் ராசேந்திர சிலையை நிறுவவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள் வீ. ராஜேந்திரன், ச. தனலட்சுமி, ஜெ. கீதா, இரா. ராமச்சந்திரன், ராஜேந்திரன், ப. குலக்கொடி, க. ஷகிலாதேவி ஆகியோா் தீா்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்தனா்.

முன்னதாக வரவு செலவு கணக்குகள், வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் அரியலூா், திருமானூா், செந்துறை, தா.பழூா், ஜயங்கொண்டம், தா. பழூா் ஆகிய ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அனைத்துத் துறை அலுவலா்கள் தங்களது துறை சாா்ந்த திட்டங்களை உறுப்பினா்களிடம் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com