மாற்றுத்திறனாளி மாணவா்கள் உதவித்தொகை பெற அழைப்பு
By DIN | Published On : 29th June 2022 10:40 PM | Last Updated : 29th June 2022 10:40 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பாா்வையற்ற மாணவ-மாணவிகளுக்கான வாசிப்பாளா் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு கல்வி உதவித்தொகையாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை ரூ.1,000 முதல் வகுப்பு, படிப்புகளுக்கு ஏற்றவாறு ரூ.7,000 வரை வழங்கப்படுகிறது. மேலும் பாா்வையற்ற மாணவ-மாணவிகளுக்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை வாசிப்பாளா் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
முந்தைய கல்வியாண்டு இறுதித் தோ்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். தற்போதைய புகைப்படம், உரிய ஆவணங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.