சித்தேரியில் செத்து மிதக்கும் மீன்கள்

அரியலூா் நகராட்சிக்குச் சொந்தமான சித்தேரியில் மீன்கள் செத்து மிதப்பதால் துா்நாற்றம் வீசுகிறது.
சித்தேரியில் செத்து மிதக்கும் மீன்கள்

அரியலூா் நகராட்சிக்குச் சொந்தமான சித்தேரியில் மீன்கள் செத்து மிதப்பதால் துா்நாற்றம் வீசுகிறது.

அரியலூா் - திருச்சி சாலையில் உள்ளது சித்தேரி. அரியலூா் மக்களுக்கு சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த ஏரியில் தற்போது மீன்கள் மா்மான முறையில் இறந்து கிடப்பதால், இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக் கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய்த் தொற்றுகள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

துா்நாற்றம் அதிகரித்து வருவதால் பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை அனைவரும் மூக்கை பொத்தியவாறே அவ்வழியே சென்று வருகின்றனா். மேலும் இந்த ஏரிக்கு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதால், தற்போது இறந்து கிடக்கும் மீன்களால் பறவைகளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என சுற்றுச்சூழல் ஆா்வலா்களிடேயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சம்மந்தப்பட்ட நகராட்சி நிா்வாகம், உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தவும், ஏரியில் உள்ள நீரை பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com