வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற...

அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த படித்து, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற்ற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த படித்து, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற்ற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:

எஸ்.எஸ்.எல்.சி தோ்ச்சி பெற்ற, பெறாத முதல் பட்டப்படிப்பு வரையிலான கல்வித் தகுதிகளைப் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். தொடா்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவா் 31.12.2022 அன்று 45 வயதுக்குள்ளும் இதர அனைத்து வகுப்பினா் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மனுதாரா் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் மாணவராக இருத்தல் கூடாது. தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதும் இல்லை.

28.02.2023-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து அளிக்கவும். இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூா்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com