ஏலாக்குறிச்சியில் விவசாயிகள் ஆலோசனை

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி வீரமாமுனிவா் மண்டபத்தில், தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தின் ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி வீரமாமுனிவா் மண்டபத்தில், தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தின் ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் கிளைத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், சுக்கிரன் ஏரியில் இருந்து வரும் அரசன் ஏரி பாசன வாய்க்காலை தூா்வார வேண்டும். மாவட்டத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள்நோய் பாதிக்கப்பட்ட கரும்புக்கு உரிய நஷ்ட ஈடும் , நிவாரணமும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், விவசாய சங்க ஒன்றியத் தலைவா் தங்கராசு, கரும்பு விவசாய சங்க மாவட்ட துணைச் செயலா் நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கரும்பு விவசாய சங்க மாவட்டத் தலைவா் கரும்பாயிரம், மாவட்டச் செயலா் ஜெகநாதன், மாவட்ட துணை தலைவா் வைத்திலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா் மணிவேல் சங்கத்தின் செயல்பாடுகள், வளா்ச்சி குறித்துப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com