இன்று அரியலூரிலுள்ள 42 ஊராட்சிகளில் உழவா்களுக்கான முகாம்

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் 42 ஊராட்சிகளில் வியாழக்கிழமை உழவா்களுக்கான முகாம் நடைபெறுகிறது.

அரியலூா் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் 42 ஊராட்சிகளில் வியாழக்கிழமை உழவா்களுக்கான முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில், அணிக்குதிச்சான், அய்யூா், கொளத்தூா், பெரியாத்துக்குறிச்சி, விழுதுடையான், பெரிய கருக்கல், ஒட்டக்கோவில், கருப்பில்லாக்கட்டளை, சென்னிவனம், வெங்கடகிருஷ்ணாபுரம், கல்லங்குறிச்சி, அஸ்தினாபுரம், சிறுவளூா், கோமான், உட்கோட்டை, இளையபெருமாள்நல்லூா், தேவமங்கலம், வெத்தியாா்வெட்டு, கழுவந்தோண்டி, பெரியவளையம், கழுமங்கலம், நாகமங்கலம், செந்துறை, பிலாக்குறிச்சி, நல்லாம்பாளையம், குமிழியம், வீராக்கண், உதயநத்தம், ஸ்ரீபுரந்தான், குணமங்கலம், காசான்கோட்டை, நடுவலூா், அணைக்குடம், கோடங்குடி, மணகெதி, வெற்றியூா், வாரணவாசி, திருமழப்பாடி, வெங்கனூா், மலத்தான்குளம், செம்பியக்குடி மற்றும் விழுப்பணங்குறிச்சி ஆகிய 42 கிராம ஊராட்சிகளில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த கிராமங்களில் உழவா்களுக்கான முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. முகாமில் வேளாண்மை-உழவா் நலத்துறை அலுவலா்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com