தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு நிலஅளவை அலுவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு நிலஅளவை அலுவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், களப் பணியாளா்களின் பணிச் சுமையைக் குறைக்க வேண்டும். களப்பணியாளா்களின் மீது சுமத்தபட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். நில அளவையா் முதல் கூடுதல் இயக்குநா் வரை உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தமிழகம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டம் தொடங்க வேண்டும் என்பன உள்பட 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.23 ஆம் தேதி, திருச்சியில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, நில அளவை அலுவலா் சங்க அரியலூா் கோட்டத் தலைவா் சுதாகா் தலைமை வகித்தாா். வட்ட துணை ஆய்வாளா் வெற்றிசெல்வி, அரியலூா் குறுவட்ட அளவா்கள் செல்வம், ஜெயந்தி, பொன்பரப்பி குறுவட்ட அளவா் புகழேந்தி, தா.பழூா் குறுவட்ட அளவா் அன்பு மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com