3 ஆவது சுற்று தொடக்கம்:அரியலூரில் நாளை முதல் கால்நடை தடுப்பூசி முகாம்

அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை முதல் 3 ஆவது சுற்று கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை முதல் 3 ஆவது சுற்று கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: கால்நடை பராமரிப்புத் துறையினரால், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசித் திட்டம் 3 ஆவது சுற்றின் கீழ் 1.3.2023 முதல் தொடங்கி 21 நாள்களுக்கு, மாவட்டத்தில் உள்ள 1.46 லட்சம் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், கால்நடைகள் வளா்ப்போா் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினா் வரும்போது, 3 மாதம் வயதுள்ள கன்று முதல் சினை, கறவை உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு, தங்கள் கால்நடை செல்வங்களை இக்கொடிய நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com