தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் இரு சக்கர வாகனப் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், திருமானூரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் வியாழக்கிழமை இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், திருமானூரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் வியாழக்கிழமை இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனா்.

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை சட்ட உத்தரவாதம் செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிா்க் காப்பீடு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். 60 வயது நிறைந்த விவசாயிகள், விவசாய தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.6,000 வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் வரப்பிரசாதம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணிவேல், மாவட்டத் தலைவா் செந்தில்நாதன் உள்பட விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com