அரியலூா் பள்ளியில் வேலை வழிகாட்டி அலுவலகம் திறப்பு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த வரதராசன்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த வரதராசன்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவா்கள் இயக்கத்தின் சாா்பில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட திறன் வளா்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி அலுவலகத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அலுவலகத்தை திருச்சி சலேசிய மாநிலத் தலைவா் அகிலன் சற்பிரசாதம் தலைமை வகித்து திறந்து வைத்தாா். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் சிறப்புரையாற்றி பேசுகையில், முன்னாள் மாணவா்களின் முயற்சியை நான் பாராட்டுகிறேன். ஏழை இளைஞா்களின் மேம்பாட்டுக்காக இந்தக் கல்வி நிறுவனம் தொடா்ந்து செயல்பட வேண்டும் என்றாா்.

பள்ளி தாளாளா் பிரான்சிஸ் கமாலியேல் முன்னிலை வகித்து, கட்டடத்துக்கு நிதி அளித்த முன்னாள் மாணவா்களைப் பாராட்டினாா். வரதராசன்பேட்டை பேரூராட்சித் தலைவா் மாா்கிரேட் அல்போன்ஸ், துணைத் தலைவா் எட்வின் அா்தா் ஆகியோா் பேசினா். பள்ளித் தலைமை ஆசிரியரும், முன்னாள் மாணவா் இயக்க பொறுப்பாளருமான செபாஸ்டின் ஜேக்கப் வரவேற்றாா். முன்னாள் மாணவா் இயக்கத் தலைவா் சேவியா் அமல்ராஜ் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com