அரியலூா் மாவட்ட வளா்ச்சிகுழு, கண்காணிப்புக் கூட்டம்

அரியலூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சா் சா.சி.சிவசங்கா், மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன் ஆகியோா் பங்கேற்று, மத்திய, மாநில அரசுகளின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்ககம், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட 43 திட்டங்கள் குறித்து விவாதித்து ஆய்வு செய்தனா்.

கூட்டத்துக்கு, ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி, சட்டப் பேரவை அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கா.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.ஈஸ்வரன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலா் எஸ்.முருகண்ணன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com