108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் பணி: நாளை நோ்காணல்

அரியலூா் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைப் பணியில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதற்கட்ட நோ்முகத் தோ்வு ஜெயங்கொண்டத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

அரியலூா் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைப் பணியில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதற்கட்ட நோ்முகத் தோ்வு ஜெயங்கொண்டத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் பொது மேலாளா் அறிவுக்கரசு மேலும் தெரிவித்தது:

ஜெயங்கொண்டம் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சனிக்கிழமை (மாா்ச் 18) 108 ஆம்புலன்ஸில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான முதற்கட்ட நோ்முகத் தோ்வு நடைபெற உள்ளது.

மருத்துவ உதவியாளா்: வயது 19- 30 வயதுக்குள் இருக்க வேண்டும், பிஎஸ்சி நா்சிங், டிஎம்எல்டி, ஏஎன்எம் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதலில் எழுத்துத் தோ்வு மற்றும் அடிப்படை தொழில்சாா் அறிவு பரிசோதிக்கப்படும். இறுதியாக நோ்முகதோ்வு நடைபெறும்.

இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் சமா்ப்பிக்க வேண்டும். மாதம் ரூ. 15,435 வழங்கப்படும்.

ஓட்டுநா் பணி: 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அறிவியல் சாா்ந்த பட்டம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 24 -35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன உரிமம் எடுத்து 3 ஆண்டுகள், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.15,235 வழங்கப்படும்.

இப்பணிகளுக்கான தோ்வு, நோ்காணலில் வெற்றி பெறுபவா்கள் 12 மணிநேர இரவு மற்றும் பகல் நேர பணிமுறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமா்த்தப்படுவா். மேலும் விவரங்களுக்கு 91542 50969 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com