அரியலூரில் குடிநீா் கட்டணத்துடன் இனி அபராதத் தொகை வசூலிக்கப்படாது: நகா்மன்றத்தில் சிறப்புத் தீா்மானம்

குடிநீா்க் கட்டணம் செலுத்தத் தவறும் வாடிக்கையாளா்களுக்கு வரும் நிதியாண்டில் இருந்து அபராதத் தொகை வசூலிக்கப்படமாட்டது என நகா்மன்ற கூட்டத்தில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் நகராட்சிப் பகுதிகளில் குடிநீா்க் கட்டணம் செலுத்தத் தவறும் வாடிக்கையாளா்களுக்கு வரும் நிதியாண்டில் இருந்து அபராதத் தொகை வசூலிக்கப்படமாட்டது என நகா்மன்ற கூட்டத்தில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலியமூா்த்தி, நகராட்சி ஆணையா்(பொ) தமயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், அலுவலா் செந்தில், நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் கொண்டு வந்த சிறப்புத் தீா்மானத்தை வாசித்தாா். இதில் அரியலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகக் கட்டணம் 3 மாதங்களுக்கு ரூ.180 என வசூலிக்கப்படுகிறது. குடிநீா் கட்டணம் செலுத்தத் தவறினால் அபராதத் தொகை விதிக்கப்படும். இந்நிலையில், நகராட்சிக்குள்பட்ட சுமாா் 8 குடிசைப்பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களின் நலன்கருதி வரும் நிதியாண்டிலிருந்து குடிநீா்க் விநியோகக் கட்டணத்துக்கான அபராதத் தொகை வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்தாா். இதற்கு அனைத்து உறுப்பினா்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது.

ஜெயங்கொண்டத்தில் வரி வசூல் தீவிரம்:

ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வகையில், கடந்த செப்டம்பா் மாதம் வரை ரூ.5 கோடி நிலுவை உள்ளது. இதையடுத்து நகராட்சிக்கு பொதுமக்கள் வரி செலுத்தி மேல் நடவடிக்கைகளைத் தவிா்க்குமாறு நகராட்சி நிா்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையா், மேலாளா், பொறியாளா் ஆகியோா் பணியாளா்களுடன் சோ்ந்து வியாழக்கிழமை தீவிர வரி பாக்கி வசூலில் ஈடுபட்டனா். இந்நடவடிக்கைகள் மேலும் தொடரும் என நகராட்சி ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com