தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்

அரியலூா், ஆண்டிமடம் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தாா்.

அரியலூா், ஆண்டிமடம் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: மேற்கண்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவிப் பெறும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சோ்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.

இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்களில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7.6.2023 அன்றுக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 9499055877, 04329-228408, 94990 55879 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com