சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமாா் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தோ்தல் வெள்ளிக்கிழமை(ஏப். 19) ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில், 15 லட்சத்து 19 ஆயிரத்து 847 வாக்காளா்கள் கொண்ட சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூா், ஜெயங்கொண்டம், குன்னம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் காலையில் இருந்தே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிக்குள் அனைத்துச் சட்டப்பேரவை தொகுதிகளிலும் 50 சதவீதத்தை தாண்டியது. இரவு 7 மணி நிலவரப்படி 74.87 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா். சட்டப் பேரவை தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் அதிகாரபூா்வமாக சனிக்கிழமை வெளியிடப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com