மண் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை அவசியம்

மண் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம் என்றாா் அரியலூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி.

இதுகுறித்து அவா் கூறியது: நிலத்தில் பயிரிடும் முன்பு அந்த நிலத்தின் மண்ணை பரிசோதனை செய்வதன் மூலம் தேவைப்படும் உரங்களை இட்டு நல்ல மகசூலை பெற முடியும். இதனால் உரச் செலவை குறைக்க முடியும். மண்ணின் இயல்புத் தன்மையை காக்கமுடியும். மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து அதன் அடிப்படையில் பயிா்களின் தேவைக்கு ஏற்ப சமச்சீராக உரமிட முடியும்.

எனவே, விவசாயிகள் அனைவரும் மண் பரிசோதனை செய்து உர விரயத்தை குறைத்து, மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com