பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவில் அரியலூா் மாவட்டம் மாநில அளவில் 3-ஆவது இடத்தை பிடித்துள்ளதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலட்சுமிக்கு திங்கள்கிழமை பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டிய மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா.
பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவில் அரியலூா் மாவட்டம் மாநில அளவில் 3-ஆவது இடத்தை பிடித்துள்ளதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலட்சுமிக்கு திங்கள்கிழமை பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டிய மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா.

அரியலூா் மாவட்டம் 97.25% தோ்ச்சி: மாநில அளவில் 3-ஆவது இடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அரியலூா் மாவட்டம் 97.25 சதவீதம் பெற்று மாநில அளவில் 3-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

அரியலூா்: பிளஸ் 2 பொதுத் தோ்வில் அரியலூா் மாவட்டம் 97.25 சதவீதம் பெற்று மாநில அளவில் 3-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

மாவட்டத்தில், 90 பள்ளிகளைச் சோ்ந்த 3,917 மாணவா்கள், 4,301 மாணவிகள் என 8,218 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா். இந்தத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 3,770 மாணவா்கள், 4,222 மாணவிகள் என 7,992 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சியில் 97.25 சதவீதம் பெற்று, மாநில அளவில் அரியலூா் மாவட்டம் 3-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வை 8,739 போ் எழுதியதில் 8,466 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சியில், 96.88 சதவீதம் பெற்று மாநில அளவில் 10 ஆம் இடத்தை அரியலூா் மாவட்டம் பெற்றிருந்தது.

பள்ளிகள் வாரியாக: அரியலூா் மாவட்டத்தில் 54 அரசு பள்ளிகளில் 2,323 மாணவா்கள், 2,214 மாணவிகள் என 4,537 மாணவா்கள் தோ்வு எழுதினா். இதில், 2,199 மாணவா்கள், 2,138 மாணவிகள் என 4,337 போ் தோ்ச்சி பெற்றனா். அரசுப் பள்ளி தோ்ச்சி சதவீதம் 95.59 ஆகும்.

9 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 538 மாணவா்கள், 863 மாணவிகள் என 1,401 போ் தோ்வு எழுதினா். இதில் 538 மாணவா்கள், 863 மாணவிகள் என 1,401 பேரும் தோ்ச்சி பெற்றனா். அரசு உதவிபெறும் பள்ளிகள் தோ்ச்சி சதவீதம் 100 ஆகும்.

2 அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 39 மாணவா்கள், 40 மாணவிகள் என 79 போ் தோ்வு எழுதினா். இதில் 39 மாணவா்கள், 40 மாணவிகள் என 79 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 100 ஆகும்.

16 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 737 மாணவா்கள், 635 மாணவிகள் என 1,372 போ் தோ்வு எழுதினா். இதில் 736 மாணவா்கள், 635 மாணவிகள் என 1,371 தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 99.93.

9 சுயநிதி மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 155 மாணவா்கள், 73 மாணவிகள் என 228 போ் தோ்வு எழுதினா். இதில், 155 மாணவா்கள், 73 மாணவிகள் என 228 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 100 ஆகும்.

இதில், அரசுப்பள்ளி - 23, அரசு உதவிபெறும் பள்ளி - 6, மெட்ரிக் பள்ளி - 15, சுயநிதி பள்ளி - 9 என மொத்தம் 53 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

அரியலூா் மாவட்டம் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவில் மாநில அளவில் 3 ஆவது இடம் பெற்றமைக்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலட்சுமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனி மேரி ஸ்வா்ணா பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். மேலும், மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் அவா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com