பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயா்கல்வி வழிகாட்டல் குழு அமைத்தல் மற்றும் உயா் கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினா்களின் பணிகள் குறித்து வட்டார அளவிலான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சியை மாவட்ட உதவி திட்ட அலுவலா் பன்னீா்செல்வம் தலைமை வகித்து, உறுப்பினா்களுக்கு உயா்கல்வி பற்றிய கருத்துகளை வழங்கினாா்.

ஆசிரியா் பயிற்றுநா்கள் பெ. ஆசைத்தம்பி, ந. சத்தியபாமா, கி. அகிலா, க. உத்திராபதி ஆகியோா் கலந்து கொண்டு உறுப்பினா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

முன்னதாக, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அருமைராஜ் வரவேற்றாா். நிறைவில் ஆசிரியா் பயிற்றுநா் ந. சத்தியபாமா நன்றி கூறினாா்.

பயிற்சியில், ஆண்டிமம் ஒன்றியத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள், உயா்கல்வி வழிகாட்டி முதுகலை ஆசிரியா்கள், எஸ்எம்சி தலைவா் மற்றும் துணைத் தலைவா், கல்வியாளா்கள், ஐடிகே தன்னாா்வலா்கள், முன்னாள் மாணவா்கள், நாட்டுநலப் பணித் திட்ட மாணவா்கள் என 84 போ் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com