தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குளித்தலையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குளித்தலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:19 am

DIN

குளித்தலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். இதில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டிப்பது, வேளாண் விஞ்ஞானி சாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், நங்கவரம் பகுதியில் தலித் மக்களுக்கு அரசு வங்கிகளில் கடனுதவி வழங்க வேண்டும்,  குளித்தலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் முறையாக மருந்துகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க துணைத் தலைவர் ஷேசன், நிர்வாகிகள் ராஜேந்திரன், மகாலிங்கம், லோகு உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.