கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தைத் தோற்றுவித்த மெல்வின்ஜோன் மற்றும் நிகழாண்டின் பன்னாட்டு தலைவர் நரேஷ் அகர்வால் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் யாத்ரீகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி லயன்ஸ் சங்கத்தின் உணவு திட்டத்தின் கீழ் நடைபெற்றது. மெஜஸ்டிக் சங்கத் தலைவர் மேலை. பழநியப்பன், செயலர் கே. மனோகரன், வழக்குரைஞர் கார்த்திகேயன், சரவணன், நடராசாவள்ளியப்பன், அகல்யா மெய்யப்பன், ஆனிலை பாலமுருகன்,இளையோர் மேம்பாடு மாவட்டத் தலைவர் சேதுசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.